தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் சேவையில் மேலும் 118 ஊர்திகள்: முதல்வர் தொடங்கி வைத்தார் !

108 ஆம்புலன்ஸ் சேவையில் மேலும் 118 ஊர்திகள்: முதல்வர் தொடங்கி வைத்தார் !

jagadeesh

உரிய நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையில், ஆயிரத்து ஐந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், 103 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக வாங்கப்பட்டுள்ள 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இன்று துவக்கி வைத்தார்.

இவற்றில் 10 வாகனங்கள் ரத்ததான ஊர்திகளாக பயன்படுத்தப்பட உள்ளன. செயற்கை சுவாச கருவி உள்ளிட்ட உயர்தர உயிர்காக்கும் 60 மருத்துவ சாதனங்கள் இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும். இவை அனைத்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளன.