ooty hill rail pt desk
தமிழ்நாடு

உதகை மலை ரயிலின் 116-வது பிறந்தநாள் விழா: ஆடல் பாடலுடன் விமர்சையாக கொண்டாட்டம்

உதகை மலை ரயிலின் 116 ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

webteam

ஆங்கிலேயர் ஆட்சியில் 1899 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் முதன் முறையாக இயக்கப்பட்டது. அதன்பின் 1909 ஆம்ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி மலை ரயில் சேவை உதகை வரை நீட்டிக்கப்பட்டது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதி நீலகிரி மலை ரயில் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ooty

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை ரயில் நிலையம் வரை 16 குகைகளும், 216 வளைவுகளும் 250 பாலங்களும் உள்ளன. ஆசியாவிலேயே மிகவும் செங்குத்தான மீட்டர் கேஜ் ரயில் பாதையில் உதகை பாலமே மிகவும் நீளமானது. நீலகிரி மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

இந்நிலையில், இந்த ரயிலின் 116 ஆவது பிறந்த நாள்விழா உதகை ரயில் நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பயணிகளுக்கு நீலகிரி மலை ரயில் அறக்கட்டளை சார்பில் மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கேக் வெட்டி, இனிப்புகளும் வழங்கப்பட்டன. சுற்றுலா பயணிகளுக்கு மலை ரயிலின் சிறப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

ooty hill rail

மண்ணின் மைந்தர்களான தோடர் இன மக்கள், தங்கள் பாரம்பரிய உடை அணிந்து, அவர்களது மொழியில் பாடல் பாடி நடனமாடினர். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.