தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கமுதி பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கமுதி பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

Sinekadhara

கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டில் 10 வார்டுகளில் சுயேட்சை கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வகியுள்ளனர். 14 வது வார்டில் பாஜக போட்டியின்றி தேர்வாகியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு 15 வார்டுகள் உள்ளன. 15 வார்டுகளுக்கு 46 பேர் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தனர். ஆனால் இன்று மனுக்கள் வாபஸ் பெற்ற நிலையில் 4 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 1, 4, 5, 7, 8, 10, 11,12, 13, 14, 15 ஆகிய (11) வார்டுகளின் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கமுதி பேரூராட்சிக்கு திமுக போட்டியிடவில்லை. அதிமுக ஒரு வார்டில் மட்டும் போட்டியிடுகிறது. 4 வார்டுகளில் பாஜக போட்டியிட்டாலும் 14 வது வார்டில் பாஜக சார்பில் சத்யா என்ற பெண் வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டம்மி வேட்பாளர் சாந்தி தன் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். கமுதி பேரூராட்சிக்கு 7 வது வார்டில் போட்டியின்றி ஜெயித்த அப்துல் வகாப் சகாராணி (ஆண்) என்பவர் தலைவராகவும், 10வது வார்டில் போட்டியின்றி ஜெயித்த அந்தோணி சவேரியார் அடிமை என்பவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் உள்ளது.