தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 1,085 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக கரூரில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 56 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பெரம்பலூரில் 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளளன. அங்கு 23 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 39 தொகுதிகளிலேயே குறைவாக நாகப்பட்டினத்தில் 9 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.
இதனிடடையே விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில், 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 14 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளளன.