பூண்டி ஏரியில் இருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் இணைந்து பூண்டி ஏரியில் தண்ணீர் திறந்து வைத்தனர். பூண்டி ஏரியின் 10, 12ஆம் மதகுகளில் இருந்து தலா 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொறுத்து படிப்படியாக 10 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்க திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.