தமிழ்நாடு

100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர்கள் படுகாயம்

100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர்கள் படுகாயம்

Rasus

நீலகிரி மாவட்டம் உதகையில் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரின் ஓட்டுநர் உயிரிழந்தார். 5 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

உதகையை அடுத்த லவ்டேல் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 5 மாணவர்களை கில்பர்ட் என்பவர் தமது காரில் ஏற்றிக்கொண்டு சென்றதாகத் தெரிகிறது. கார் லவ்டேல் பாலம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், கார் நிலை தடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் கில்பர்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மாணவ மாணவிகள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்த சுஷ்மிதா, ஜான் மைக்கேல் ஆகிய இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.