தமிழ்நாடு

பூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்

பூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்

webteam

கருணாநிதி மறைந்து இன்றுடன் 100 நாட்கள் ஆகும் நிலையில் அவரது சமாதி வித்தியாசமான முறையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதி கடந்த ஆஸ்ட் மாதம் 7-ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உடல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றைய நாள் முதல் கருணாநிதியின் சமாதி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான பொதுமக்கள் கருணாநிதியின் நினைவிடத்தை காண வந்து செல்வதால் காவல்துறையினர் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதி இறந்து இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. இதையொட்டி கருணாநிதி சமாதி வித்தியாசமான முறையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதாவது கருணாநிதி, அவரது தாயார் அஞ்சுகத்துடன் அமர்ந்திருக்கும் இளம் வயது புகைப்படம் ஒன்றை போன்று பூக்களால் வரையப்பட்டுள்ளது. இது காண்போரை கவரும்படி அமைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின், “நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கலைஞர் அவர்கள் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்! 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.