தமிழ்நாடு

தூர்வாரப்படாத வடிகால் : நீரில் மூழ்கிய 100 ஏக்கர் சம்பா பயிர்கள்

தூர்வாரப்படாத வடிகால் : நீரில் மூழ்கிய 100 ஏக்கர் சம்பா பயிர்கள்

webteam

கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் 100 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், அன்னவாசல், கல்யாண மகாதேவி, அனக்குடி, கொட்டாரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர் மழைநீரில் மூழ்கின. அப்பகுதிகளில் உள்ள கல்யாண மகாதேவி வடிகாலை தூர்வாராததால் மழைநீர் நிலத்திலேயே தேங்கி நிற்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

மழைநீர் வடியாமல் இதே நிலை நீடித்தால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் எனக்கூறும் விவசாயிகள், காட்டாறிலும் அதிக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கல்யாண மகாதேவி வாய்க்காலிலிருந்து காட்டாறுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். எனவே, கல்யாண மகாதேவி வாய்க்காலிலிருந்து தண்ணீரை வடிய வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.