தமிழகத்தில் வெயிலின் வெப்பநிலை இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது.
கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாகியுள்ளது.
இன்று அதிகபட்சமாகத் கரூர் மற்றும் வேலூரில் 107.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது. இதைத்தொடர்ந்து திருத்தணியில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சேலம் 105 டிகிரி பாரன்ஹீட், மதுரை விமான நிலையம் 104.72 டிகிரி பாரன்ஹீட், மதுரை 102.9 டிகிரி பாரன்ஹீட், தருமபுரி 102.5 டிகிரி பாரன்ஹீட், பாளையங்கோட்டை 102.2 டிகிரி பாரன்ஹீட், நாமக்கல் 101.3 என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.