தமிழ்நாடு

இனப்பெருக்கும் குறைவு: சென்னையில் இருந்து களக்காடு முண்டந்துறைக்கு சென்ற புள்ளி மான்கள்

இனப்பெருக்கும் குறைவு: சென்னையில் இருந்து களக்காடு முண்டந்துறைக்கு சென்ற புள்ளி மான்கள்

webteam

சென்னையிலிருந்து இனப் பெருக்கம் குறைந்துள்ள களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் முதற்கட்டமாக 10 புள்ளி மான்கள் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை நகரத்தில் தரமணி, டி.எல்.எப், ஐஐடி வளாகம், கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழக வளாகம், கோட்டூர்புரம், ரேஸ் கோர்ஸ் மற்றும் விமானப்படை வளாகம் ஆகிய பல்வேறு இடங்களில் புள்ளிமான்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மான்கள் சென்னை நகரில் இருக்கும் பிளாஸ்டிக் பைகளை உண்டும் வாகன போக்குவரத்தில் சிக்கியும் சில மான்கள் உயிரிழந்துள்ளன. 

இதனையடுத்து இந்த மான்கள் இறப்பதை தடுக்க அவற்றை களக்காடு-முண்டந்துறை காப்புக்காட்டில் இடமாற்றம் செய்வது தொடர்பாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அறிவுரையின்படி வனத்துறை அலுவர்கள் ஆய்வு நடத்தினர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 10 புள்ளி மான்கள் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இந்த மான்கள் அனைத்தும் 19.06.2019 சிறப்பு வாகனம் மூலம் மிகுந்த பாதுகாப்புடன் இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த வாகனத்தில் மான்களுக்கு தேவையான தீவனம் மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் இந்த வாகனத்தில் மான்கள் சகஜமாக இருக்க காடுகள் போல் சேடிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. 

இந்த மான்கள் அனைத்தும் கடந்த 20ஆம் தேதி கள்ளகாடு-முண்டந்துறை காப்பு காட்டை சென்றடைந்தன. இந்தியாவிலேயே முதல் முறையாக 700 கிலோமீட்டர் தொலைவிற்கு மான்கள் இடமாற்றம் செய்யப்பட்டது தமிழ்நாட்டில்தான். இதற்கு முன்பு மத்திய பிரதேசத்தில் சுமார் 300-500 கிலோமீட்டர் தொலைவிற்கு மான்கள் இடமாற்றம் செய்யப்பட்டது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.