தமிழ்நாடு

கனமழை எதிரொலி ! காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

webteam

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.இதனால் காவிரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 1,00,000 கன அடி நீர் திறப்பு விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகள் கர்நாடகாவில் அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. 

கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 60 ஆயிரம் கன அடி நீரும், கபினியில் இருந்து 40 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் அதிகளவு நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83 அடியைக் கடந்ததுள்ளது. ஒரு லட்சம் கன அடி நீர் நாளை ஒகேனக்கல்லை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கை அடுத்து கர்நாடகாவின் மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதே போல் தமிழகத்தில் ஊட்டமலை, ஒகேனக்‌கல், மாறுகொட்டாய், நாகமலை, நெருப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.‌ தொடர்ந்து 8வது நாளாக ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.