தமிழ்நாடு

"அறிவியல் துணையோடு உண்மையான வரலாறு மீட்டெடுக்கப்படுகிறது" - சு.வெங்கடேசன் எம்.பி

"அறிவியல் துணையோடு உண்மையான வரலாறு மீட்டெடுக்கப்படுகிறது" - சு.வெங்கடேசன் எம்.பி

Veeramani

வரலாறு பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, இந்திய வரலாற்றின் விதிகளை மாற்றும் அறிக்கை என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். புராணங்களை வரலாறு என பொய்யர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், வைகை, பொருநை என்று ஆற்றங்கரைதோறும் அறிவியல் துணையோடு உண்மையான வரலாறு மீட்டெடுக்கப்படுகிறது என்றும், கீழடியில் கண்டறியப்பட்ட வெள்ளி முத்திரை நாணயம் மெளரியர் காலத்திற்கு முற்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாண்டியனின் கொற்கை துறைமுகம் கி.மு எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும், பொருநை நதி நாகரிகத்தின் காலம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறியுள்ள எம்.பி. சு.வெங்கடேசன், இந்திய வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.