தமிழ்நாடு

”திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்”-முதல்வர் ஸ்டாலின்

”திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்”-முதல்வர் ஸ்டாலின்

sharpana

”பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்” என்று மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்பட அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று அமலுக்கும் வந்தது.

இந்நிலையில், திருநங்கைகளுக்கும் கட்டணமின்றி பயணிக்க முடிவு எடுக்கவேண்டும் என்று ட்விட்டரில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் ”மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.