தமிழ்நாடு

"தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்"- சென்னை வானிலை மையம்

"தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்"- சென்னை வானிலை மையம்

sharpana

'தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

”தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும், தமிழக உள் மாவட்டங்களில் இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை, அடுத்த இரு நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் கடலோர மாவட்டங்களில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை இருப்பதால், வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்” என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னையைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.