தமிழ்நாடு

"எந்தத் தொற்றுகள் வந்தாலும் தடுக்கும் பணிகள் தீவிரம்" - அமைச்சர் மா.சுப்ரமணியன்

"எந்தத் தொற்றுகள் வந்தாலும் தடுக்கும் பணிகள் தீவிரம்" - அமைச்சர் மா.சுப்ரமணியன்

Veeramani

அண்டை மாநிலங்களிலிருந்து எந்த வைரஸ் தொற்றுகள் வந்தாலும் அதைத் தடுக்கும் பணிகள் மாநில எல்லைகளிலேயே நடத்தப்பட்டு வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு வருவாய்த்துறை சார்பில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, மடுவின்கரையில் நடைபெற்றது. இதில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சு.ப்பிரமணியன், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 10ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கூறினார். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், எல்லைப் பகுதிகளில் தொற்று தடுப்புப் பணிகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.