தமிழ்நாடு

"இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம்" - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

"இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம்" - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Veeramani

ஐ.நா மன்றத்தில் இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என அந்நாட்டு வெளியுறவு செயலாளர் கூறியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மன்றத்தில் நாளை கொண்டுவரும் தீர்மானத்தில் அந்நாட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும், போர்க்குற்ற விசாரணை சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட பிரதமர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் நடந்த தவறுகளுக்கு இலங்கை அரசை பொறுப்பாக்க வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.