தமிழ்நாடு

"கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு" - மா.சுப்பிரமணியன்

"கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு" - மா.சுப்பிரமணியன்

sharpana

”கொரோனா தொற்று அதிகம் காணப்படும் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கப்படும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசிகள் மத்திய தொகுப்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன. இவை தேனாம்பேட்டையில் உள்ள தமிழக மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய மா.சுப்பிரமணியன், இதுவரை தமிழகத்துக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் தடுப்பூசிகள் வந்திருப்பதாகவும், இதுவரை 90 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.