தமிழ்நாடு

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு புகார்: நேரில் விசாரணை நடத்த திட்டம்?

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு புகார்: நேரில் விசாரணை நடத்த திட்டம்?

jagadeesh

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு புகாரில் சந்தேகத்திற்குள்ளானவர்களிடம் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வரும் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் தரவரிசையில் முன்னிலை பெற்றதாக புகார்கள் எழுந்தன. சந்தேகத்திற்கு உள்ளான தேர்வர்களின் பட்டியலும் தேர்வர்கள் சிலரால் வெளியிடப்பட்டது. குரூப் 4 தேர்வில் 57 பேர், குரூப் 2ஏ தேர்வில் 32 பேர் என அந்தப் பட்டியல் இருந்தது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகிக்கப்படும் தேர்வர்களின் விடைத்தாள்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. முறைகேடுகள் நடந்ததா என்பதை உறுதி செய்ய பல்வேறு கட்ட விசாரணைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சந்தேகிக்கப்படும் தேர்வர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.