தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான திமுக வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

webteam

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

உயர்நீதிமன்ற தலைமைப் பொறுப்பு வகிக்கும் நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் மற்றும் ஆர். மகாதேவன் முன்னிலையில்‌, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில்‌ திமுக மூத்த வழ‌க்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி மனு செய்தார். ‌கடந்த சனிக்கிழமை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வா‌‌‌க்கெடுப்பு நடத்தப்பட்டதாக அவர் நீதிபதிகளிடம் முறையிட்டார். சட்டப்பேரவையில் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக வி‌சாரிக்க வேண்டும் என்று சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பான மனுவை முதல் வழக்காக இன்று எடுத்து விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.