விளையாட்டு

குளோபல் டி20 போட்டி தாமதம்: சம்பள பிரச்னைக்காக போராடிய யுவராஜ் அணி 

குளோபல் டி20 போட்டி தாமதம்: சம்பள பிரச்னைக்காக போராடிய யுவராஜ் அணி 

rajakannan

கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் லீக் டி20 தொடரின் போது சம்பள பிரச்னைகாக வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடாவில் குளோபல் லீக் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கிறிஸ் கெயில், யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில், யுவராஜ் சிங்கின் டொரொண்டோ நேஷனல் மற்றும் மொண்ட்ரியல் டைகர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது.

                                              
இந்தப் போட்டி இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. முதலில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் போட்டி தாமதமானதாக குளோபல் டி20 நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால்,  சம்பள பிரச்னை காரணமாக வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பின்னர்தான் தெரியவந்தது. இந்த இரண்டு அணிகளின் வீரர்கள் மட்டுமல்லாமல் மற்ற அணி வீரர்களுக்கும் இதே பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், சம்பள பிரச்னைக்கு முடிவு கட்டாமல் களத்தில் இறங்கமாட்டோம் எனத் தொடக்கத்தில் கூறினர். வீரர்களை போட்டியை நடத்தும் நிர்வாகத்தினர் சமாதானம் செய்தனர். அதனால், இரண்டு மணி நேர தாமத்திற்கு பின் போட்டி தொடங்கியது. பிரச்னை குறித்து வருத்தம் தெரிவித்து நிர்வாகத்தின் அறிக்கை வெளியிட்டனர்.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டொரொண்டோ நேஷனல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய மொண்ட்ரியல் டைகர்ஸ் அணி 19.3 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனர். இதனால், நேஷனல் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யுவராஜ் சிங் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. கடந்தப் போட்டியில் அவர் டக் அவுட் ஆகியிருந்தார். 6 அணிகள் பங்கேற்ற குளோபல் லீக் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் முன்னேறியுள்ளன.