விளையாட்டு

யுவராஜ், ரெய்னா தேர்வு ஆகாததற்கு இதுதான் காரணமா?

யுவராஜ், ரெய்னா தேர்வு ஆகாததற்கு இதுதான் காரணமா?

webteam

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்படவில்லை. 

ஒவ்வொரு கிரிக்கெட் தொடருக்கு முன்னும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு முன் பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த தேர்வில் ரெய்னா, தோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் நடந்த யோ-யோ (Yo-Yo) தேர்வில் ரெய்னா, யுவராஜ் சிங் தேர்ச்சி பெறாததால்தான் அணியில் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டது. 

ஆனால் இதை மறுத்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராம்ஜி சீனிவாசன். ‘ஒரு டெஸ்ட்டை மட்டும் கணக்கில் வைத்துக்கொண்டு யாரையும் நீக்கவோ சேர்க்கவோ வாய்ப்பில்லை’ என்று கூறியுள்ள அவர், பலத்தின் அளவு, வேகம், சுறுசுறுப்பு, சக்தி, ஒட்டுமொத்த பலம் உட்பட பல்வேறு உடற்தகுதி சோதனைகளின் அடிப்படையிலேயே கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ரெய்னாவும் யுவராஜூம் சிறந்த வீரர்கள். அவர்கள் தேர்வு பெறவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.