விளையாட்டு

பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படும் wwe போட்டிகள் !

jagadeesh

wwe என்று உலகளவில் கொண்டாடப்படும் மல்யுத்தப் போட்டி உலகளவில் மிகவும் பிரபலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்தப் போட்டிகள் அமெரிக்காவில் மிகவும் பிரபலம், இந்தப் போட்டிகள் வாரந்தோறும் இரண்டு பெயர்களில் நடத்தப்படுகிறது. இது wwe ரா என்றும் ஸ்மேக் டவுன் என்றும் திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நாள்களில் நடைபெறும்.

இது இந்தியாவில் நேரலையாக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பப்படும். இவ்வகையான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. முக்கியமாக wwe போட்டிகளுக்கு சிறுவர்கள் பலரும், பெரியவர்கள் சிலரும் இன்னும் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் 1990-களுக்கு பின்பு கேபிள் டிவிகளும், சேட்டிலைட் சேனல்களும் வந்த பின்புதான் wwe பிரபலமாக தொடங்கியது.

wwe போட்டிகளில் ஹல்க் ஹோகன், ரிக் ஃப்ளேர், ஹிட் மேன், மாச்சோ மேன், அண்டர்டேக்கர், ஸ்டோன் கோல்டு, ராக், படீஸ்டா, ட்ரிப்பிள் எச் மற்றும் ஜான் சீனா ஆகியோர் wwe போட்டிகளை பார்ப்பவர்களின் ஆதர்ச நாயகன்களாக இருக்கின்றனர். இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு ரோமன் ரெய்ன்ஸ், பிராக் லெஸ்னர் என்று பலரும் இருக்கின்றனர்.

உலகளவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு அச்சம் அமெரிக்காவில் நடைபெறும் wwe போட்டிகளையும் விட்டுவைக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக wwe வரலாற்றில் முதல் முறையாக ரா மற்றும் ஸ்மேக் டவுன் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கு உயிரிழப்பு 200க்கு மேல் சென்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்பட பலரும் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய மருத்துவம பரிசோதனை செய்துக்கொண்டனர்.இந்தளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா அச்சம் wwe போட்டிகளையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இன்று காலை ஒளிப்பரப்பான wwe ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகியது.