விளையாட்டு

இந்தியாவிற்கு சமமான அணி நியூசிலாந்து - கேப்டன் கோலி புகழாரம்

இந்தியாவிற்கு சமமான அணி நியூசிலாந்து - கேப்டன் கோலி புகழாரம்

webteam

இந்திய கிரிக்கெட் அணியுடன், ஓர் அணி நம்பர் ஒன் இடத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அது நியூசிலாந்தாகத்தான் இருக்குமென விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே பெரிய வேறுபாடு இல்லை எனவும், இரண்டுமே அனைத்து அணிகளும் வீழ்த்த விரும்பும் அணிகளாக இருக்கின்றன என விராட் கோலி குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணியுடன், ஓர் அணி நம்பர் ஒன் இடத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அது நியூசிலாந்தாகத்தான் இருக்கும் என்றார்.

நியூசிலாந்துக் கேப்டன் கனே வில்லியம்சனுடன் பவுண்டரி லைனில் அமர்ந்து என்ன பேசுனீர்கள் என இந்திய கேப்டன் விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, வில்லியம்சனுடன் கிரிக்கெட் தொடர்பாக பேசவில்லை எனவும், வாழ்க்கை தொடர்பான கருத்துகளை பரிமாறிக் கொண்டதாகவும் கூறினார்.

இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியும் ஒயிட் வாய் செய்துள்ளன. இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, நாளை தொடங்குகின்றது. இந்தத் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.