விளையாட்டு

‘நான் அப்படி நடந்து கொண்டதற்கு வருந்துகிறேன்’-ஜோகோவிச்

EllusamyKarthik

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். 

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் நான்காவது சுற்று ஆட்டத்தின் முதல் சுற்றில், பின்தங்கிய நிலையில் இருந்த காரணத்தினால் ஆவேசமடைந்த அவர் டென்னிஸ் பந்தை தனது ரேக்கட்டால் ஓங்கி அடித்தார். அது லைன் அபிஷியலாக நின்று கொண்டிருந்த பெண் நடுவரின் கழுத்து பகுதியில் பட்டதால் ஜோகோவிச் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனையடுத்து ஜோகோவிச் தனது செயலுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

‘நடந்த இந்த சம்பவத்தால் நான் சோகமாகவும், வெறுமையாகவும் உணர்கிறேன். பந்தை நான் எதேச்சையாக தான் அடித்தேன். லைனில் நின்று கொண்டிருந்த பெண் நடுவரின் மீது பந்து பட்டவுடன் அவரிடம் ஓடிச் சென்று பார்த்தேன். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என தெரிந்ததும் கடவுளுக்கு நன்றி சொன்னேன். 

அவருக்கு உடல் ரீதியாக வலி கொடுத்ததற்காக நான் வருந்துகிறேன்.  இந்த தகுதி நீக்க நடவடிக்கை என்னை ஒரு மனிதனாகவும், வீரர்களும் பக்குவப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கிறேன். களத்தில் அப்படி நடந்து கொண்டமைக்காக வருந்துகிறேன். எனக்கு எப்போதும்  ஆதரவாக இருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். 

தேங்க் யூ  அண்ட் ஐ எம் சாரி’ என சொல்லியுள்ளார் ஜோகோவிச்.