விளையாட்டு

தடகளப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு தடை - உலக தடகள கூட்டமைப்பு அறிவிப்பு

தடகளப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு தடை - உலக தடகள கூட்டமைப்பு அறிவிப்பு

JustinDurai

ரஷ்ய வீரர்கள் தடகளப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது உலக தடகள கூட்டமைப்பு.

கடந்த 6 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக ரஷ்யா மீது உலக நாடுகள் மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களும் தங்களது சேவைகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அனைத்து விதமான தடகளப் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது உலக தடகள கூட்டமைப்பு.

ஓமனில் வரும் மார்ச் 4ஆம் தேதி உலக தடகள நடைப்பந்தய சாம்பியன்ஷிப் தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டு துறைகளில் இருந்தும் ரஷ்யா முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷ்ய தேசிய அணி உட்பட அந்த நாட்டின் எந்த அணிகளும் உலக அளவில் கால்பந்து விளையாட்டு தொடர்களில் பங்கேற்க FIFA மற்றும் UEFA அமைப்புகள் இடைக்கால தடை விதித்துள்ளன.

இதையும் படிக்க: போர்ச் சூழலில் இருப்பவர்கள் தற்காத்துக் கொள்வது எப்படி?- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி விளக்கம்