விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து: தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது அமெரிக்கா

rajakannan

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அமெரிக்க அணி இழந்துள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் டிரினி‌டாட் அண்ட்‌ டொபாகோ அணியை எதிர்த்து அமெரிக்க அணி விளையாடியது.

டிரினி‌டாட் அண்ட்‌ டொபாகோ அணி, ஏற்கனவே உலகக்கோப்பைக்கான தகுதியை இழந்திருந்தது. இந்த நிலையில் அந்த அணி கடைசிப் போட்டியில் இரண்டுக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கியதால், 1986ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை அமெரிக்க அணி இழந்தது. இந்தப் பிரிவில் மெக்சிகோ, கோஸ்டாரிகா, பனாமா அணிகள் தகுதி பெற்றன.