விளையாட்டு

டி20 தொடர்: அசத்துமா இந்திய அணி? டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு!

டி20 தொடர்: அசத்துமா இந்திய அணி? டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு!

ச. முத்துகிருஷ்ணன்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வென்று, மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து அசத்தியது. இந்நிலையில் அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதன் முதல் டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு டிரினிடாட் மைதானத்தில் துவங்க உள்ளது.

இந்த டி20 போட்டியில் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் ஓய்விற்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு இந்த தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடக்க வீரராக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் கொரோனா காரணமாக இந்த தொடரில் விளையாடவில்லை. முழுவதுமாக தொடரிலிருந்து விலகிய அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணிக்கு தேர்வாகியுள்ளார்.

கடைசியாக 5 போட்டியில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ்க்கு இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தினேஷ் கார்த்திக்கிற்கும் இந்த தொடரில் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

இந்திய அணி: ரோகித் சர்மா(கேப்டன்), ரிஷப் பண்ட் , ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங்.

மேற்கிந்திய தீவுகள் அணி: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஒடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓபேட் மெக்காய் மற்றும் ஹேடன் வால்ஷ் ஜூனியர்