விளையாட்டு

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன்: நிரவ்மோடி

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன்: நிரவ்மோடி

jagadeesh

இந்தியாவிடம் தாம் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என நிரவ் மோடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை மூலம் 13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி. லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.  தற்போது லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே, நிரவ் மோடி சார்பில் மீண்டும் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தாம் சிறை கைதிகளால் மூன்று முறை தாக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவிடம் தாம் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் நிரவ் மோடி மனுவில் குறிப்பிட்டிருந்தார். தாம் மன அழுத்தத்தில் இருப்பதால்,ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற நிரவ் மோடியின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. ஜாமீன் வழங்க இருமடங்கு பிணைத்தொகை அளிக்க தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதையும் லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது.