விளையாட்டு

முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?

முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?

ச. முத்துகிருஷ்ணன்

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது.  


இந்தியன் பிரீமியர் லீக்கின் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளே ஆப் போட்டிகள் நாளை முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் சாம்பியன்கள் எல்லாம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இடம்பிடித்து விட்டது. 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசன் முதல் நடப்பு சீசன் வரை கடைசி இடத்தை பிடித்த அணிகள் எவை என்பதைப் பார்ப்போம்.

ஆண்டு கடைசி இடம்
2008 டெக்கான் சார்ஜர்ஸ்
2009 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2010 கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2011 டெல்லி டேர்டெவில்ஸ்
2012 புனே வாரியர்ஸ் இந்தியா
2013 டெல்லி டேர்டெவில்ஸ்
2014 டெல்லி டேர்டெவில்ஸ்
2015 கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2016 கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2017 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2018 டெல்லி டேர்டெவில்ஸ்
2019 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2020 ராஜஸ்தான் ராயல்ஸ்
2021 சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
2022 மும்பை இந்தியன்ஸ்

டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 முறை புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தைப் பிடித்து மோசமான சாதனையை தன்வசம் வைத்துள்ளது. துவக்கம் முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே ஒரு முறைகூட இறுதி இடத்தை பிடிக்காமல் மகத்தான சாதனை ஒன்றை தொடர்ந்து வருகிறது.