மோர்னே மோர்கல், முகமது ஷமி எக்ஸ் தளம்
விளையாட்டு

BGT 2024-25|உடற்தகுதியை நிரூபித்த முகமது ஷமி..இருந்தும் தேர்வு செய்யப்படாததுஏன்? மோர்கல் சொல்வதென்ன?

ஆஸ்திரேலிய தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி இடம்பெறாதது கேள்விக்குறியாகி உள்ளது.

Prakash J

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை (நவம்பர் 22) பெர்த் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் சொந்த காரணங்களுக்காக ரோகித் சர்மா விலகியுள்ள நிலையில், துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தலைமை பதவியை வகிக்க உள்ளார். இந்த தொடரில் வெற்றிபெற்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முகமது ஷமி

இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி இடம்பெறாதது கேள்விக்குறியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் ஓராண்டுக்குப் பிறகு உடற்தகுதியை எட்டி, களத்திற்குத் திரும்பிய அவர், ரஞ்சிப் போட்டியில் தாம் யார் என்பதைத் தேர்வுக்குழு முன்பு நிரூபித்தார்.

இதையடுத்து, அவர் ஆஸ்திரேலியா தொடருக்கு அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. இது, ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. மேலும், இதனால் தேர்வு வாரியத்தையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: அதானிக்கு செக் வைத்த கென்யா.. 736 டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து.. தலைவலியாய் மாறிய லஞ்சப் புகார்!

அதேநேரத்தில், முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், ”முகமது ஷமி ஓர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். ஷிமியை ஏன் அணிக்கு கொண்டு வரவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். இதில் ஒரு விஷயத்தை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஓர் ஆண்டாக எந்த ஊரில் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கின்றார். இந்தச் சூழலில் அவரையும் அவருடைய உடல் நலத்தையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஷமி தற்போது ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் திரும்பியதே, எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக இருக்கின்றது. தற்போது ஷமிக்கு நாங்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும். அவரை அணிக்கு திரும்பி அழைத்து வருவதற்கான சிறந்த வாய்ப்பை நாங்கள் அவருக்கு வழங்க வேண்டும்.

முகமது ஷமி

ஷமியை அவசரப்படுத்த விரும்பவில்லை. அவர் விஷயத்தில் நாங்கள் பொறுமையாகவே முடிவெடுக்க விரும்புகிறோம். அவர் தற்போதுதான் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட தொடங்கி இருக்கின்றார். டெஸ்ட், டி20 என எந்தவித போட்டியாக இருந்தாலும், அவர் அதில் பங்கேற்று எவ்வாறு செயல்படுகிறார் என்பதை இன்னும் கவனிக்க வேண்டியது இருக்கின்றது. அதில் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பார்த்துத்தான் அணியில் தேர்வு செய்வது குறித்து யோசிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆந்திரா | மணமகனுக்கு பரிசு கொடுத்துவிட்டு மயங்கிவிழுந்த நபர்.. மேடையிலேயே நிகழ்ந்த சோகம்!