விளையாட்டு

ஒவ்வொரு முறையும் செஞ்சுரி அடிக்க முடியுமா? கேட்கிறார் விராத்

ஒவ்வொரு முறையும் செஞ்சுரி அடிக்க முடியுமா? கேட்கிறார் விராத்

webteam

’ரசிகர்கள் அதிகமாகவே எதிர்பார்ப்பார்கள், அதற்காக ஒவ்வொரு முறையும் செஞ்சுரி அடிக்க முடியுமா?’ என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘களத்துக்குள் நான் இறங்கிவிட்டால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அது எனக்கு அழுத்தமாகவும் இல்லை. ஒவ்வொரு முறையும் என்னால் செஞ்சுரி அடிக்க முடிக்க முடியாது. ரசிகர்கள் அதிகமாகவே எதிர்பார்ப்பார்கள். அது அனைத்தையும் நிறைவேற்ற முடியாது என்பது தெரியும். ஏனென்றால் நாங்கள் இன்னொரு 11 பேர் கொண்ட அணியோடு விளையாடிக் கொண்டிருக்கிறோம். அதனால் என்னை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. ஒரு பேட்ஸ்மேனாக நான் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்கிறேன். அந்த கடமை எனக்கு இருக்கிறது. அதை விடுத்து என்னைப் பற்றி மக்கள் என்ன நினைத்தாலும் எழுதினாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை.  

நான் இந்தியாவுக்காக விளையாடுகிறேன். நாட்டின் பிரதிநிதியாக ஆட்டத்தில் இருக்கிறேன். அதைத்தாண்டி எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை. அதன் மூலம் நான் நினைக்கப்படுவதையும் விரும்பவில்லை. எனது பிட்னஸ் பற்றி கேட்கிறார்கள். உடலை தகுதியாக வைத்துக்கொள்வது விளையாட்டு வீரருக்கு முக்கியம். மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடும் போது ’பிட்’டாக இருப்பது அவசியம். அதனால் அதில் அதிக கவனம் செலுத்துகிறேன்’ என்றார்.