விளையாட்டு

ஐபிஎல் கோப்பையில் சமஸ்கிருதத்தில் வாசகமா? என்ன எழுதயிருக்கிறது?

ஐபிஎல் கோப்பையில் சமஸ்கிருதத்தில் வாசகமா? என்ன எழுதயிருக்கிறது?

EllusamyKarthik

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்வது யார்? என எட்டு அணிகளும் கடுமையாக மோதி விளையாடும். 

நடப்பு ஐபிஎல் சீசனில் கூட ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணியை உறுதி செய்ய 60 ஆட்டங்கள் நடைபெற்றன. லீக் மற்றும் நாக்-அவுட் என இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

ஒவ்வொரு சீசனிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளின் பெயர் கோப்பையில் செதுக்கப்படும். அது தவிர ‘யாத்ரா பிரதிபா அவ்ஸர பிரப்நொதி’ என சம்ஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. 

‘திறமையும் வாய்ப்பும் சங்கமிக்கின்ற இடம்’ என்பது தான் அதன் பொருள். அந்த வாய்ப்பையும் திறமையையும் மும்பை அணி ஐந்து முறை சங்கமிக்க செய்துள்ளது. 

முன்னதாக, ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இண்டியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாயும், ரன் அப் ஆக வந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 12.5 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டது. அதுதவிர ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன், பவுலர் என பல பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருது தேவ்தத் படிக்கலுக்கு வழங்கப்பட்டது.