வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணி முகநூல்
விளையாட்டு

39 ரன்னில் ஆல் அவுட் - டி20 உலகக்கோப்பையில் மோசமான சாதனை படைத்த உகாண்டா அணி; வெஸ்ட் இண்டீஸ் அபாரம்!

PT WEB

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆனாலும், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 44 ரன்கள் எடுத்தார். ரஸல் 30, பவெல் 23, பூரான் 22, ருதர்போர்டு 22 ரன்கள் எடுத்தனர்.

174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஹொசைன். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர் உகாண்டா வீரர்கள். 12 ஆவது ஓவரில் வெறும் 39 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது உகாண்டா அணி.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அகீல் ஹொசைன் 11 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட் எடுத்தார். 134 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இது குறைவான ஸ்கோர். இதற்கு முன்பு 2014 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக நெதர்லாந்து அணியும் 10.3 ஓவர்களில் 39 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது.