ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகனா மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் டி-20 போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் லெவிஸ் 41 பந்துகளில் 68 ரன்களும் கேப்டன் பொல்லார்டு 22 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர். ஆப்கான் தரப்பில், முஜிப், ரஷித் கான், நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் குல்பதின் நைப் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 30 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டும், பொல்லார்ட், வால்ஷ் தலா 2 விக்கெட்டும் கோட்ரல், ஹோல்டர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.