விளையாட்டு

தனது ராசியான மைதானத்தில் நியூசி.யை சந்திக்கிறது இந்தியா

தனது ராசியான மைதானத்தில் நியூசி.யை சந்திக்கிறது இந்தியா

webteam

இந்திய கிரிக்கெட் அணி, தனது ராசியான மைதானத்தில், நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. 

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கி லாந்து, நியூசிலாந்து அணிகள், அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் விராத் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி நடக்கிறது.

போட்டி நடக்கும் ஓல்டு டிராஃபோர்ட் மைதானம், இந்திய அணிக்கு ராசியானது. இங்கு நடந்த பல போட்டிகளில் இந்திய அணி வென்றிருக்கிறது. 1936 ஆம் ஆண்டு, இந்திய அணியின் முதல் வெளிநாட்டு போட்டி இங்குதான் நடந்தது. அப்போது இங்கி லாந்துக்கு எதிராக, சையத் முஷ்டாக் அலி, விஜய் மெர்ச்சன்ட் சதம் அடித்தனர்.

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, கோப்பையை வென்றதும் இந்த மைதானத்தில்தான். அப்போது இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 1999 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தில்தான் பாகிஸ்தான் அணியை, இந்தியா வீழ்த்தியது. 

இந்த மைதானத்தில், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில், முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்றிருக்கின்றன. அதனால் இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய வகிக்கும்.  மான்செஸ்டரில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மைய ம் தெரிவித்துள்ளது. அதனால் போட்டி தாமதமாகத் தொடங்கும் என்று தெரிகிறது