விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளை நடத்த தயார்: கேரளா கிரிக்கெட் சங்கம்

ஐபிஎல் போட்டிகளை நடத்த தயார்: கேரளா கிரிக்கெட் சங்கம்

webteam

கேரளாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த தயார் என அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சமூக நல அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. 2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை தமிழக இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. சில அரசியல் அமைப்புகள் சேப்பாக்கம் மைதானத்திற்கு கருப்பு உடை அணிந்து சென்று தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க உள்ளதாக கூறினர். 

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகள் இடம் மாறும் என்ற தகவலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்கும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேரளா கிரிக்கெட் சங்கம் கூறுகையில், “நேற்றைய தினம் பிசிசிஐ தரப்பில் ஒருவேளை போட்டியை சென்னையில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், கேரளாவில் வைத்து கொள்ள முடியுமா என்று கேட்டனர்.அதற்கு நாங்கள் கேரளாவில் போட்டியை வைத்துக்கொள்ள தயார் என்று கூறியுள்ளோம்.இதுவரை போட்டியை மாற்றவில்லை. ஆனால் அரசியல் காரணங்களால் ஒருவேளை போட்டியை சென்னையில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், நாங்கள் போட்டியை நடத்துவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளோம்.மேற்கொண்டு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளது.