விளையாட்டு

இந்திய கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே இடம் பிடித்த வீரர்கள் யார், யார்?

இந்திய கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே இடம் பிடித்த வீரர்கள் யார், யார்?

webteam

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வயதில் அதாவது 18 வயதில் இடம் பிடித்திருக்கிறார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியை இன்று காலை வழங்கினார், தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.

சுந்தருக்கு முன், யார் யாரெல்லாம் இளம் வயதில் அணியில் பிடித்திருக்கிறார்கள்? அவர்களின் லிஸ்ட் இது:

சச்சின் டெண்டுல்கர்தான், இந்திய அணியில் மிகக் குறைந்த வயதில் இடம் பிடித்தவர். இனி வேறொரு வீரருக்கு இப்படியொரு வாய்ப்புக் கிடைக்குமா என்பது தெரியாது. அவர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் சேர்க்கப்பட்ட போது வயது 16 வயது, 238 நாட்கள்.

அடுத்து மணிந்தர் சிங், 17 வயது 222 நாட்களில் அணியில் சேர்ந்தார் 1983-ம் ஆண்டு. ஹர்பஜன் சிங், 17 வயது 288 நாட்கள், பார்த்திவ் பட்டேல் (17 வயது, 301 நாட்கள்), சுக்லா (17 வயது 320 நாட்கள்), சேதன் சர்மா (17 வயது 338 நாட்கள்), பியூஸ் சாவ்லா (18 வயது), சுரேஷ் ரெய்னா (18 வயது 245 நாட்கள்), யுவராஜ் சிங் (18 வயது 296 நாட்கள்), இஷாந்த் சர்மா (18 வயது 300 நாட்கள்), எல். சிவராமகிருஷ்ணன், தினேஷ் கார்த்தி, ரவிசாஸ்திரி, கங்குலி, கும்ப்ளே, கபில்தேவ், காம்ளி, விராத் கோலி ஆகியோர் 19 வயதில் அணிக்குள் நுழைந்தனர்.