விளையாட்டு

போட்டிய மீண்டும் நடத்துங்க! அர்ஜென்டினாவுக்கு எதிராக பிரான்ஸ் ரசிகர்கள் கையெழுத்து வேட்டை!

போட்டிய மீண்டும் நடத்துங்க! அர்ஜென்டினாவுக்கு எதிராக பிரான்ஸ் ரசிகர்கள் கையெழுத்து வேட்டை!

kaleelrahman

கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் நடுவரின் முடிவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் களம்கண்ட அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் கடும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்புக்கும் விறு விறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்த போட்டி 3:3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற டைபிரேக்கர் முறையில் 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற அர்ஜென்டினா கோப்பையை தட்டித் தூக்கியது.

36 ஆண்டுகளுக்குப் பின்பு கோப்பையை வென்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு அந்த நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு அணிவகுப்பில் லட்சக்கணக்கான மக்கள் கலந்த கொண்டதால் வீரர்களின் பாதுகாப்பு கருதி அணிவகுப்பு பாதியிலேயே முடிந்தது. இந்நிலையில், உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் வெற்றி மீதும், நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு எதிராகவும் சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இறுதிப் போட்டியில் முதல்பாதி ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு ஒரு பெனல்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி முதல் கோலை பதிவு செய்தார். அப்போதே பிரான்ஸ் அணிக்கு எதிராக வழங்கிய பெனல்டி வாய்ப்பு குறித்து ரசிகர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதெல்லாம் பெனல்டியா, விஏஆர் முடிவு எதற்காக இருக்கு. அதை நடுவர் பயன்படுத்தி இருக்கலாம் போன்ற பல கருத்துகள் பரவியது.

அதேபோல், அர்ஜென்டினா அணி 3:2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த போது கூடுதல் நேர ஆட்டத்தின் 118-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ஒரு பெனல்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்ஃபே கோலாக்கி ஆட்டத்தை சமன் செய்தார். இதுவும் தேவையில்லாத பெனல்டி என்றும், அர்ஜென்டினா அணிக்கு கொடுத்த பெனல்டியை நடுவர் சமன் செய்து விட்டார் என்றும் ரசிகர்கள் பேசிக்கொண்டனர்.

ஆனால், மெஸ்ஸியின் இரண்டாவது மற்றும் அர்ஜென்டினாவின் மூன்றாவது கோல் தொடர்பாக சர்ச்சை இருந்து வந்தது. அதாவது போட்டியின் போது ஆஃப்சைடு காரணமாக இந்த கோலை கொடுத்திருக்கக் கூடாது என்ற சர்ச்சையும் இப்போது எழுந்துள்ளது. கோன்சாலோ மான்டியேல் பந்தை எதிர் அணியின் திசையை நோக்கி கடத்திச் சென்ற போது மெஸ்ஸி ஆஃப்சைடில் இருந்து திரும்பி வருவது போல் இருந்தது. அப்போது ஆட்டத்தில் குறுக்கிடாத மெஸ்ஸி, நேரடியாக பந்தை பெறாததால் இந்த கோல் சரியானதுதான் என போட்டியின் நடுவர் சிமோன் மார்சினியாக் மற்றும் அவரது நடுவர் குழுவினர் கருதினர்.

கால்பந்து சங்கம் மற்றும் பிஃபா விதிகளின்படி, ஒரு வீரர் பந்தைப் பெறும்போதோ அல்லது எதிராளியை விளையாடுவதைத் தடுப்பதன் மூலமோ அல்லது அவரது பார்வைக்கு இடையூறாக பந்தை தடுப்பதன் மூலம், எதிராளிக்கு சவால் விடுவது போல் நடந்து கொண்டால் அது ஆஃப்சைடு ஆகும், ஆனால். அதுபோல் இந்த கோலை அடிக்கும்போது மெஸ்ஸி நடந்துகொள்ள வில்லை என்றே தோன்றுகிறது.

ஆர்ஜென்டினா அணி அடித்த முதல் இரண்டு கோல்கள் தொடர்பாக ஏறக்குறைய 2,00,000 பிரான்ஸ் ரசிகர்கள் இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இதில், ஏஞ்சல் டி மரியா மற்றும் ஓஸ்மான் டெம்பேல் ஆகியோருக்கு இடையே குறைந்த இடைவெளி இருந்ததால் அர்ஜென்டினா அணிக்கு வழங்கிய முதல் பெனால்டி தவறானது என்று அவர்கள் கூறினர். இதில் நடுவர்களின் தவறு என்று 195,000 கையெழுத்துக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை பிரிட்டனின் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் பத்திரிகை தனது பக்கத்தில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற டி மரியாவுக்கு ஒரு தட்டில் பந்தை வைத்து கொடுத்தது போல கிறிஸ்டியன் ரொமெரோவால் ஃபவுல் செய்யப்பட்டதாக பிரான்ஸ் ரசிகர்கள் கருதினர் என்றும், பிரெஞ்சு அவுட்லெட்> இறுதிப் போட்டி முடிந்து மறுநாள் காலை, விளையாட்டின் சட்டங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டி அர்ஜென்டினாவின் மூன்றாவது விருதை வழங்கக்கூடாது என்று ஒரு கட்டுரையை வெளியிட்டது,

சர்வதேச கால்பந்து சம்மேளன விளையாட்டு விதிகளின் ஒன்பதாவது பத்தியின் படி, 'ஒரு கோல் அடித்த நிலையில், மீண்டும் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, ஒரு நபரே, ஒரு மாற்று வீரரோ களத்தில் இருப்பதை நடுவர் உணர்ந்தால் அது கோலாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மாறாக கோல் அடித்த பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஒரு நபரோ, ஒரு மாற்று வீரரோ களத்தில் இருந்ததாக நடுவர் உணர்ந்தால் அப்போது அதை கோலாக நடுவர் அனுமதிக்க வேண்டும்'.

எது எப்படியோ கால்பந்து விதிகளின்படி ஒரு போட்டியில் நடுவர் எடுக்கும் முடிவே இறுதியானது. அதை மாற்றுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. அர்ஜென்டினாவில் வெற்றி வெற்றியே.