இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததும் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன் என்று அந்த அணியின் பயிற்சியாளார் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் கடந்த 16 ஆம் தேதி மோதின. இதில் 89 ரன் வித்தி யாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து பாகிஸ்தான் அணியை, அந்நாட்டின் முன்னாள் வீரர்க ளும் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த தோல்வி காரணமாக, அடுத்து நடக்கும் அனைத்து போட்டியிலும் பாகிஸ்தான் அணி வென்றால்தான் அரையிறுதிக்கு நுழைய முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றதை அடுத்து தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரி வித்துள்ளார்.
அவர் கூறும்போது, ’’மிக விரைவாக அந்த எண்ணம் வந்துவிட்டது. ஒரே ஒரு சிறந்த ஆட்டம் அணியின் நிலையை மாற்றும் என்பது தெரியும். அதனால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். நீங்கள் ஒரு போட்டியில் தோற்றால், அடுத்தப் போட்டி யிலும் தோற்கிறீர்கள். இது உலகக் கோப்பை, மீடியா பார்வை, ரசிகர்கள் எதிர்பார்ப்பு என எல்லாம் இருக்கிறது. அதை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அணி வீரர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஒரே ஒரு சிறந்த ஆட்டம் எல்லாவற்றையும் மாற்றும். அதை இன்று யார் செய்யப் போகிறார்கள் என்று?’’ என்றார்.
பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை நாளை எதிர்கொள்கிறது.