விளையாட்டு

வாக்னர் வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து : நியூசி. இன்னிங்ஸ் வெற்றி!

வாக்னர் வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து : நியூசி. இன்னிங்ஸ் வெற்றி!

webteam

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், மவுன்ட் மவுங்கானுயி-யில் நடந்து வந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 353 ரன்கள் எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் 91 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து ஆடிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 615 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியின் வாட்லிங் இரட்டை சதம் அடித்தார். சன்ட்னர், சதம் அடித்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 262 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

பினன்ர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய  இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 197 ரன்களுக்குச் சுருண்டது. அதிகப்பட்சமாக டென்லி 35 ரன்களும் பர்ன்ஸ் 31 ரன்களும் ஆர்ச்சர் 30 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து நியூசிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 5 விக்கெட்டுகளையும் சன்ட்னர் 3 விக்கெட்டு களையும் வீழ்த்தினர். இரட்டை சதம் அடித்த வாட்லிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.