நடப்பாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஸ்பான்ஸராக மீண்டும் விவோ நிறுவனம் இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடத்தியது பிசிசிஐ. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்ஸர் நிறுவனங்கள் நிராகரிக்கப்படும் என தகவல்கள் கசிந்தன. இதை மறுத்த பிசிசிஐ, ஸ்பான்ஸர்ஷிப்பில் எந்த மாற்றமும் இருக்காது என முதலில் தெரிவித்திருந்தது.இதனையடுத்து ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக்கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் முடிவெடுத்தது.
அதேசமயம் அடுத்த ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களின் ஸ்பான்ஸர்ஷிப்பினை தொடர விரும்புவதாகவும் விவோ கூறியதாகவும் தெரிவித்தது. பின்பு கடந்தாண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக டிரீம்11 நிறுவனம் விளங்கியது. இந்நிலையில் இந்தாண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர் யாரென்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இந்தாண்டு மீண்டும் ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸராக விவோ இருக்கும் என கூறப்படுகிறது. கடந்தாண்டு ட்ரீம் 11 டைட்டில் ஸ்பான்ஸராக இருக்க ரூ.222 கோடி மட்டுமே கொடுத்தது. ஆனால் விவோ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ400 கோடி பிசிசிஐக்கு கொடுக்கும். இதனால் இந்தாண்டு மீண்டும் விவோ நிறுவனமே ஸ்பான்ஸராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.