போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலின்படி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. 2018ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. இதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். அவர் நடித்த டைகர் ஜிந்தா ஹே, ரேஸ் 3 படங்கள் ஹிட்டானதை அடுத்தும் விளம்பர படங்கள் மூலமும் அவர் இத்தனை கோடியை சம்பாதித்துள்ளார்.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலின் படி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிக விளம்பரங்களில் நடித்ததன் மூலம் விராட் கோலி இந்த ஆண்டு ரூ.228.09 கோடி சம்பாதித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ரூ.100.72 கோடி சம்பாதித்து போர்ப்ஸ் பத்திரிகையில் இடம் பிடித்து இருந்தார்.
மகேந்திர சிங் தோனி 5வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 9வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் பும்ராவும், மணிஷ் பாண்டேவும் முதன் முதலாக போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். பும்ரா 16.42 கோடி சம்பாதித்து 60வதாவது இடமும், மணிஷ் பாண்டே 13.08 கோடி சம்பாதித்து 77வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் பேட்மிண்டன் வீராங்கனைகள் பிவி சிந்து மற்றும் சாய்னா நெவாலும் இடம் பிடித்துள்ளனர். பிவி சிந்து 36.5 கோடி சம்பாதித்து 4வதாவது இடமும், சாய்னா 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.