விளையாட்டு

“முடிந்த அளவு நாங்கள் அனைத்தையும் கொடுத்தோம்” - கோலி ஆதங்கம்

“முடிந்த அளவு நாங்கள் அனைத்தையும் கொடுத்தோம்” - கோலி ஆதங்கம்

webteam

உலகக் கோப்பையில் அடைந்த தோல்வி குறித்து இந்திய அணி வீரர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதிப் போட்டி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது.  இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நின்றது. அதனையொட்டி நேற்று மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 221 ரன்கள் எடுத்து 18 ரன்களில் தோல்வியை தழுவியது. அத்துடன் உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி முற்றிலுமாக வெளியேறியது. 

இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “முதலில் எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இந்தத் தொடரில் ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு மிகவும் சிறப்பானது. தற்போது உங்களைபோல் நாங்களும் வருத்தத்துடன் இருக்கிறோம். எனினும் நேற்றைய போட்டியில் வெற்றிப்பெற எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்தோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, “எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், எங்கள் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் ஆகியவர்களுக்கு எனது நன்றி. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்தோம்” எனத் தெரிவித்தார். 

/p>

மற்றொரு இந்திய வீரரான ஷிகர் தவான், “நாம் நேற்றைய போட்டியில் நன்றாக போராடினோம். இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ள நியூசிலாந்து அணிக்கு எனது பாராட்டுக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.