'உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது என்பது ஒருவகையில் அடிக்ட்தான்' என்கிறார் விராட் கோலி.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி ஒரு ஃபிட்னஸ் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அசைவ உணவுகளை நிறுத்திவிட்டு முற்றிலும் சைவ உணவிற்கு மாறினார் விராட் கோலி. அந்தளவிற்கு தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதெற்கென குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுகிறார் அவர். இந்த நிலையில் தனது உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி குறித்துப் பேட்டி ஒன்றில் பேசியுள்ள விராட் கோலி, "நான் உணவு மற்றும் உடற்தகுதி ஆகியவற்றில் கவனம் செலுத்தாத ஒரு காலம் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனது உணவுப்பழக்கத்தை மாற்றிவிட்டேன். மேலும் ஒழுக்கமாகிவிட்டேன்.
நான் சர்க்கரை எடுத்துக் கொள்வதில்லை. குளுட்டன் இல்லாத உணவுகளையே எடுத்துக் கொள்வேன். கூடுமானவரை பாலைத் தவிர்த்து விடுவேன். வயிறு நிறைய சாப்பிடும் பழக்கம் கிடையாது. என்னைப் போன்ற உணவுப் பிரியர்களுக்கு, இவை அனைத்தும் எளிதானவை அல்ல. ஆனால் நாளின் முடிவில், உங்கள் உடலில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். உடலை ஆரோக்கியமாக பேணுவது என்பது ஒருவகையில் அடிக்ட்தான். ஒரு நாள் கூட தவறாமல் உடற்பயிற்சி செய்துவிடுவேன். மேலும், நான் ஸ்நாக்ஸ் எதுவும் சாப்பிடுவதில்லை'' என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ஸ்டியரிங்கில் மயங்கி விழுந்த டிரைவர்.. 25 KM-க்கு பிசகில்லாமல் வந்த கார்.. எப்படி நடந்தது?