விளையாட்டு

இது கோலி தானா இல்லை டிவில்லியர்ஸா? ஸ்கூப் ஷாட் ஆடி அசத்தல்!

இது கோலி தானா இல்லை டிவில்லியர்ஸா? ஸ்கூப் ஷாட் ஆடி அசத்தல்!

EllusamyKarthik

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதோடு தொடரையும் 2 - 0  என்ற கணக்கில் வென்றுள்ளது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 194 ரன்களை குவித்தது. தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய இந்தியாவிற்கு தவனும் - கே.எல். ராகுலும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 

தொடர்ந்து களம் இறங்கிய கோலியும் 24 பந்துகளில் 40 ரன்களை அடித்தார். அதில் 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸரும் அடங்கும். அதில் ஒரு சிக்ஸரை ஸ்கூப் ஷாட்டாக அடித்திருப்பார். ஆட்டத்தின் 15வது ஓவரை ஆண்ட்ரு டை வீசியிருப்பார். அந்த ஓவரின் நான்காவது பந்து ஆப் லைனில் வீசப்பட்டிருக்கும். ஆனால் கோலி இரண்டடி முன்னாள் நகர்ந்து வந்து ஸ்கூப் ஷாட் ஆடி அந்த பந்தை ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் அடித்திருப்பார். இது மாதிரியான ஷாட்டை 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆடுவது தான் வழக்கம். அதனால் ஏபிடி இந்தியாவின் ப்ளூ ஜெர்சியில் ஆடுவதை போல இருக்கிறது கோலியின் ஷாட் என ரசிகர்களும், விமர்சகர்களும் சொல்லி வருகின்றனர்.

இதே மாதிரியான ஷாட்டை கோலி ஐபிஎல் தொடரிலும் ஆடியது உண்டு. கோலியின் ஷாட்டை ஏபி டிவில்லியர்ஸும் சூப்பர் என பாராட்டியுள்ளார். கோலியும், டிவில்லியர்ஸும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.