விளையாட்டு

"கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை இல்லை!" - விடுப்பு எடுக்கும் கோலிக்கு ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!

"கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை இல்லை!" - விடுப்பு எடுக்கும் கோலிக்கு ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!

jagadeesh

"குழந்தைப் பிறப்புக்காக டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் முடிவெடுத்த விராட் கோலியை மிகவும் பாராட்டுகிறேன்" என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது; டி20 தொடரை வென்றது. இவ்விரு அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 ஆம் தேதி அடெலெய்டில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்கும் கோலி, அதற்கடுத்த 3 போட்டிகளில் பங்கேற்கமாட்டார். அனுஷ்கா சர்மா - கோலி தம்பதிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்தியா திரும்புகிறார்.

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது "கோலி ஓர் உலகத் தரத்திலான கிரிக்கெட் வீரர். அவர் டெஸ்ட் தொடரில் இல்லாதது இந்தியாவுக்கு பேரிழப்புதான். ஆனால், கிரிக்கெட் மட்டுமே கோலிக்கு வாழ்க்கையில்லை. கிரிக்கெட்டை தவிர்த்து அவருக்கு ஓர் வாழ்க்கை இருக்கிறது. அவருடைய குடும்ப வாழ்க்கை இப்போதுதான் தொடங்க இருக்கிறது. ஆஸ்திரிலேியாவுக்கு எதிராக விளையாடுவதை அவர் எப்போதும் விரும்புவார். அப்படிப்பட்ட நபர் விலகுகிறார் என்றால் அவரை நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்" என்றார்.