விளையாட்டு

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு

webteam

ஒரு கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியும் பந்துவீச்சாளர் பும்ராவும் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில், விராத் கோலி (890 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 2-வது இடத்திலும் (839 புள்ளி), நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 3-வது இடத்திலும் (830 புள்ளி) தென்னாப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக், 4-வது இடத்திலும் (803 புள்ளி) உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 2 சதம் உள்பட 424 ரன்கள் சேர்த்த வெஸ்ட இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 41-வது இடத்துக்கு வந்துள்ளார். 

(ராஸ் டெய்லர்)

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 774 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். 2-வது இடத்தில் நியூசிலாந் தின் டிரென்ட் போல்ட்டும், ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் 3 வது இடத்திலும்  தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் 4-வது இடத்திலும் 5-வது இடத்தில் ரபாடாவும் உள்ளனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் முறையே, 6 மற்றும் 7-வது இடத்தில் உள்ளனர்.  

ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்திலும் இந்தியா 2வது இடத்திலும் இருக்கிறது. நியூசிலாந்து 3-வது இடத் திலும், தென்னாப்பிரிக்கா 4-வது இடத்திலும் உள்ளன. ஆறாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதால் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.