விளையாட்டு

தமிழில் பேசி சிலாகிக்கும் தோனியும், மகள் ஜிவாவும்!

தமிழில் பேசி சிலாகிக்கும் தோனியும், மகள் ஜிவாவும்!

webteam

கிரிக்கெட் வீரர் தோனியுடன் அவரது மகள் ஜிவா தமிழில் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வரும் நிலையில், டி20 போட்டிகளில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தோனி தனக்கு அளிக்கப்பட்ட ஓய்வை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கழித்து வருகிறார். கடந்த 19ம் தேதி தோனியின் மனைவி சாக்‌ஷியின் பிறந்த நாள் கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் ஹர்திக் பாண்டியா, ராபின் உத்தப்பா உள்ளிட்ட தோனியின் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளதால் இந்திய அணி வீரர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. 

இதேபோல் பல நிகழ்ச்சிகளிலும் தோனி கலந்துகொண்டு தனது ஓய்வு நேரத்தை கழித்து வருகிறார். அவ்வப்போது தனது செல்லமகளுடன் விளையாடும் வீடியோவையும் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அப்படி இன்று பகிரப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

அந்த வீடியோவை 'கிரீட்டிங்ஸ் இன் டூ லாங்குவேஜஸ்' என்ற தலைப்பில் தோனி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் போஜ்பூரியிலும் தமிழிலும் ஜிவா பேசுகிறார். 'எப்படி இருக்கீங்க' என்று மழலை மொழியில் ஜிவா கேட்க , 'நல்லா இருக்கேன்' என்று தோனி பதிலளிக்கிறார். 

ஐபிஎல் தொடருக்கு பிறகு தோனி தமிழகத்தில் ஒருவராக ஆகிவிட்ட நிலையில் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் தமிழகத்தில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தோனியும் அவரது மகள் ஜிவாவும் தமிழில் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.