விளையாட்டு

ஆசிய மல்யுத்தப்போட்டி: வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரப்பெண்!

webteam

ஆசிய மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

கிர்கிஸ்தானில் ஆசிய மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 50 கிலோ பிரிவிலான இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் சீன வீராங்கனை சுன் லெய் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கத்தில் 0-1 என்ற கணக்கில் சீன வீராங்கனை முன்னணி வகிக்க, சில நிமிடங்களில் தொடர்ந்து 2 புள்ளிகளை பெற்று வினேஷ் முன்னிலைக்கு வந்தார். இருப்பினும் இறுதிச்சுற்றில் சீன வீராங்கனை அடுத்தடுத்த புள்ளிகளை பெற்றதால், வீழ்ச்சியடைந்தார் வினேஷ். போட்டியின் முடிவில் 2-3 என்ற கணக்கில் சீன வீராங்கனை தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இறுதிவரை போராடிய வினேஷ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவர் இரண்டாம் இடத்தை பிடித்த போதிலும், அவரது போராட்டத்திற்கு ரசிகர்கள் ஆராவாரத்துடன் உற்சாகப்படுத்தினர். 

இதற்கிடையே 59 கிலோ பிரிவிலான போட்டியில் இந்தியா வீராங்கனை சங்கீதா, கொரிய வீராங்கனை ஜியுன் உம்-ஐ வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.