வினேஷ் போகத் pt
விளையாட்டு

"உடல் அளவில் விளையாட தயார்; ஆனால், மனதளவில் உடைந்துவிட்டேன்" - வினேஷ் போகத்!

ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தன்னைப் போல் யாரும் விளையாட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என கோரியுள்ளார்.

PT WEB

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற வினேஷ் போகட், உடல் விளையாட ஒத்துழைக்கும் என்றும், ஆனால், மனதளவில் தாம் உடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்காததது வருத்தமளிப்பதாக கூறிய வினேஷ் போகட், மக்களின் அன்பையும், பாராட்டையும் பார்த்தபிறகு, இதைவிட வேறு எதுவும் தேவையில்லை என்ற எண்ணம் வந்துள்ளதாக கூறினார்.

vinesh phogat

தற்போது, தனக்கான மக்களுடன் இருப்பதாக கூறிய வினேஷ், எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை என்றும் கூறினார்.

முன்னதாக அவருக்கும், ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அமான் ஷெராவத்துக்கும் பண மாலை அணிவித்தும், தலா 5 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கியும் கவுரவிக்கப்பட்டனர்.